முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மி கட்சியில் நான் தொடர்ந்து செயல்படுவேன்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - ஆம் ஆத்மி கட்சியில் கெஜ்ரிவாலுக்கும், யோகேந்திர யாதவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் இருவரையும் ஆம் ஆத்மியில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. அப்போது யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதை தீவிரப்படுத்தும் வகையில் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் நேற்று காலை யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் இருவருக்கும் எதிராக ஆதாரங்களை வெளியிட்டனர். கட்சிக்கு எதிராக யோகேந்திர யாதவ் பேசியதாக ஒரு ஆடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நிருபர் ஒருவரிடம் பேசும் யோகேந்திர யாதவ் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடிருப்பதாக கூறப்படுகிறது.எனவே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறியோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் இருவரும் ஆம் ஆத்மியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் யோகேந்திர யாதவ் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி  கட்சியில் இருந்து என்னை விரட்ட சதி நடக்கிறது. இதற்காக என்னை தொடர்பு படுத்தி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். நான் ஆம் ஆத்மியில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து கட்சியில் செயல்படுவேன். இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து