முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை அமைச்சர் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் ஜெயலலிதா  அவர்களின் 67வது  பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்டம் சார்பில்  தனியார் நிறுவனங்களில்  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற விழாவில்  வழங்கினார்.

அம்மா அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் மற்றும் புது வாழ்வுத் திட்டம் சார்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தவும்,  இந்த முகாமில் எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், கணினி பணியாளர், கட்டுமானத் தொழில், ஓட்டுநர்,  மெக்கானிக்,  பின்னலாடை ஆகிய தொழிலில் பயிற்சி பெற்ற 67,000 நபர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும்  வழங்கவும்  மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி தலைமையில் 20.2.2015 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

புதுவாழ்வுத் திட்டம் அம்மா அவர்களால் 2005ஆம் ஆண்டு துவக்கப்பட்டு,  இத்திட்டத்தின் மூலம், இதுவரை 3,18,469 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 2,63,811 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.
 மேலும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக, 42,116 இளைஞர்களுக்கு, பல்வேறு தொழில்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டுள்ளன.

மேற்கூறிய 20.2.2015 அன்று ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  அம்மா அவர்களின் 67வது பிறந்த நாளினை முன்னிட்டு, தமிழகத்தின் சென்னை தவிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டம் ஆகியவை இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களில் 2,72,518 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் தகுதி வாய்ந்த  83,651  நபர்கள் வேலைவாய்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

வேலைவாய்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில், செல்பேசி பழுதுபார்த்தல் நிறுவனங்களுக்கு 187  நபர்களும், கணினி நிறுவனங்களுக்கு 9955 நபர்களும், கட்டுமான நிறுவனங்களுக்கு 5998 நபர்களும், பின்னலாடை நிறுவனங்களுக்கு 17,179    நபர்களும், சிறு தொழிற்சாலைகளுக்கு   8118 நபர்களும், தனியார் வாகன ஓட்டுநர் பணிகளுக்கு 20,977 நபர்களும், மருத்துவ நிறுவனங்களுக்கு 941 நபர்களும், அழகுக் கலை நிறுவனங்களுக்கு 685 நபர்களும், கோழிவளர்ப்பு நிறுவனங்களுக்கு 253 நபர்களும், கேட்டரிங் நிறுவனங்களுக்கு  1806  நபர்களும், பல்பொருள் அங்காடிகளுக்கு 6638 நபர்களும், சேவை நிறுவனங்களுக்கு  6638 நபர்களும், பொது தனியார் நிறுவனங்களுக்கு 4242 நபர்களும் ஆக மொத்தம் 83,651 நபர்கள் வேலைவாய்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் 24.2.2015 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து நபர்களுக்கும் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.  மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில்  அமைச்சர்கள் பங்கேற்று இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு, பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற, பணி நியமன ஆணைகளை, கடந்த 2.3.2015 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள தேவர் உறாலில் நடைபெற்ற விழாவில்,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்  வழங்கினார்.வேலைவாய்ப்பு பெற்ற அனைவரும் அம்மா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த விழாவில் கதர் மற்றும் கிராமத் தொழில்கள்    துறை அமைச்சர்  டி.பி.பூனாட்சி, அரசு தலைமைக் கொறடா                 ஆர்.மனோகரன்,  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் .ஜெயா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சி இயக்குநர்  கா.பாஸ்கரன்,.,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்  வி.அமுதவள்ளி,நகராட்சி நிர்வாக இயக்குநர்  ஜி.பிரகாஷ்,., பேரூராட்சிகள் இயக்குநர்  ராஜேந்திர ரத்னு,., மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்   கே.எஸ்.பழனிச்சாமி,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து