முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9ம் தேதி பிஎஸ்எல்வி சி-27 விண்ணில் பாய்கிறது

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை -  கடல் ஆராய்ச்சிக்காக ஐஆர்என்எஸ்எஸ்-1டி என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ செய்து வருகிறது. இதன் இயக்குனராக கிரண்குமார் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பின்பு விண்ணில் ஏவப்படும் முதல் செயற்கைகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-27 என்ற ராக்கெட் மூலம் வரும் 9ம்தேதி மாலை 6.35மணிக்கு ஐஆர்என்எஸ்எஸ்-1டி என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் பிரசாத் கூறியதாவது:

இஸ்ரோ செயற்கை கோள்களையும் அவற்றை விண்ணில் செலுத்துவதற்குபிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 1ம்தேதிஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, 2014 ஏப்ரல் 4ம்தேதி ஐஆர்என்எஸ்எஸ்-1பி, 2014 அக்டோபர் 16ம்தேதி ஐஆர்என்எஸ்எஸ்-1சி ஆகிய செயற்கைகோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியுள்ளது. தற்போது அந்த வரிசையில் 4வது செயற்கைகோளாக ஐஆர்என்எஸ்எஸ்-1டி வரும் 9ம்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் 4 நிலைகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் நிலையில் திட எரிபொருளும், 2ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு வருகிறது. 44.4மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட்டின் மொத்த எடை 320 டன் ஆகும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து