முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி சுரங்க அவசரச் சட்டத்தை சட்டமாக்கும் மசோதா தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கொண்டு வரப்பட்ட அவசரச் சட்டத்தை சட்டமாக்குவதற்கான மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நிலக்கரிச் சுரங்கங்கள் மசோதா 2015 என பெயரிடப்பட்ட அந்த மசோதாவை, மக்களவையில் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். அப்போது பிஜு ஜனதா தள உறுப்பினர் பர்த்ருஹரி மஹதாப், அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:

இந்த விவகாரத்தில், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தது. பிரதமருக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதிய பிறகும், ஒடிஸா அரசுடன் மத்திய அரசு கலந்து பேசவில்லை. அதேசமயம், நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தின் மூலம் ஒத்துக்கீடு செய்யும் முறையை பிஜு ஜனதா தளக் கட்சி எதிர்க்கவில்லை.

மத்திய அரசு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அரசின் இந்தச் செயல் பாராளுமன்றத்தில் ரப்பர் ஸ்டாம்ப்பாக மாற்றி விடும் என்றார்.இதன் மூலம் டெல்லியில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் ரிக்ஷாக்களை அனுமதிப்பது தொடர்பான அவசரச் சட்டத்தை சட்டமாக்குவது தொடர்பான மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மோட்டார் வாகனங்கல் மசோதா 2015 என பெயரிடப்பட்ட அந்த மசோதாவை, மத்திய சாலைப் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ன் தாக்கல் செய்தார். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 214 ஒதுக்கீடுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அந்த சுரங்கங்களை மீண்டு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதேபோல் டெல்லியில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் ரிக்ஷாக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக கொண்டு வரப்பட்ட மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு  பெரும்பான்மை இல்லாததால், அந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, அது தொடர்பான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் கொண்டு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து