முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோயில் விவகாரத்தில் பாஜக பின்வாங்கவில்லை

செவ்வாய்க்கிழமை, 3 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

லக்னோ - அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து தனது நிலைப்பாட்டிலிருந்து பாஜக பின்வாங்கவில்லை. இருப்பினும், மாற்று வழியில் தான் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்று மத்திய ரசாயனத் துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்கா ராம் அஹிர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமர் கோவில் விவகாரம் பற்றி பாஜக அரசு இதுவரை பேசாமல் உள்ளது. இது எங்களின் கௌரவப் பிரச்சனை. ராமர் கோவில் விவகாரம் குறித்து சாதுக்களும், மகான்களும் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். இந்துக்களும், முஸ்லீம்களும் அரசை சந்தித்து பேசி வருகிறார்கள். அயோத்தியில் எப்பொழுது கட்டிடம் கட்டினாலும் அது கோவில் தானே தவிர மசூதி இல்லை. ராமர் கோவிலை பிற வழிகளில் கட்டுவோம்.விவசாயிகள் மற்றும் வேலையில்லாதவர்களின் நலனுக்காக சப்கா சாத், சப்கா விகாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பதவியேற்றுள்ள அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

அந்த அரசு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும்.நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்படுகிறது. அவர்களிடம் தான் வாக்கு கேட்டு செல்ல வேண்டும். அப்படி இருக்கையில் அவர்களுக்கு தீங்கு செய்வோமா என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து