முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 தேர்வு: மதுரையில் 37 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

புதன்கிழமை, 4 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

மதுரை - மதுரை மாவட்டத்தில் 37 ஆயிரத்து 309 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை இன்று எழுத உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று 5ம் தேதி தொடங்கி வருகிற 31ம் தேதி வரை நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 276 பள்ளிகளை சேர்ந்த 17  ஆயிர்தது 935 மாணவர்கள், 19 ஆயிரத்து 374 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 309 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். இவர்களுக்காக 91 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

12 இடங்களில் வினாத்தாள்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேர்வு மையங்களில் மேஜை, மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வு ஏற்பாடுகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் ஜோ. ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில்,

91 தேர்வு மையங்களில் வினாத்தாள்கள் கொண்டு செல்ல 21 ரூட் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு மையங்களில் சரியான நேரத்திற்கு வினாத்தாள் கொடுக்கும் வண்ணம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை கண்காணிக்க பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு பறக்கும் படையினர் 170 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 91 மையங்களையும் சுழற்சி முறையில் கண்காணிப்பர். மேலும் கேப்ரன்ஹால் பள்ளியில் விடைத்தாள் திருத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விடைத்தாள்கள் இந்த பள்ளியில் பாதுகாக்கப்படவுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து