முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நிதியுதவி

புதன்கிழமை, 4 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - சென்னை, குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் கடந்த 2.3.2015 அன்று போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு சம்மந்தமான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், திமுக-வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் CITU தொழிற்சங்கத்தினர், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியதில், மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிலாளர் சங்கத்தின் எண்ணூர் பணிமனையைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் . பி. அர்ச்சுனன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிலாளர் சங்க துணைச் செயலாளரும், அண்ணாநகர் பணிமனையின் நடத்துனருமான . என். சந்திரமோகன் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மக்களின் முதல்வர் ஜெயலலிதா  மிகுந்த வருத்தமுற்றதோடு, தனது சார்பாக அமைச்சர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்து, மருத்துவ சிகிச்சைக்காக கழகத்தின் சார்பில் தலா 50,000/- ரூபாயை வழங்குமாறு ஆணையிட்டிருந்தார்கள்.

அதன் அடிப்படையில் நேற்று  மாலை கழக இலக்கிய அணிச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான பா. வளர்மதி, கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான . V. செந்தில்பாலாஜி, புதுக்கோட்டை மாவட்டக் கழகச் செயலாளரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருமான டாக்டர் C. விஜயபாஸ்கர், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். சின்னசாமி, எம்.எல்.ஏ., ஆகியோர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் . அர்ச்சுனன், சந்திரமோகன் ஆகியோரை நேரில் சந்தித்து, அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா சார்பாக நலம் விசாரித்து ஆறுதல் கூறியதோடு, மருத்துவ சிகிச்சைக்காக தலா 50,000/- ரூபாயை வழங்கி, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டனர்.

தொழிலாளர்களின் பாதுகாவலராகத் திகழும் அதிமுக பொதுச் செயலாளர், மக்களின் முதல்வர் ஜெயலலிதா   கருணை உள்ளத்தைக் கண்டு, மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியினை பெற்றுக் கொண்ட அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளம் நெகிழ நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து