முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியாது

புதன்கிழமை, 4 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

யவத்மால் - மகாராஷ்டிராவில் விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்த முடியாது என்று முதல்வர் பட்நவீஸ் பேச்சால் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் விதர்பா பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் பாசன திட்டம் தொடர்பான பரிசீலனை கூட்டத்தில் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்காக நாம் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் பாசன வசதிகளை மேம்படுத்தாத வரையில் விவசாயிகளின் தற்கொலையை நாம் தடுத்து நிறுத்த முடியாது. எனவே பாசன திட்டத்தில் உள்ள தேக்க நிலையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய அணைகளை கட்டுவதற்கு நமக்கு நீண்ட காலம் பிடிக்கும். எனவே சிறிய தடுப்பணைகளை கட்டி பாசன வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் நிலையான தண்ணீர் ஆதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய பிரதேச அரசு மாநிலம் முழுவதும் 3 லட்சம் கிணறுகளை வெட்டியுள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் பாசன வசதியை 24 சதவீதம் பெருக்கியுள்ளது. இதுபோன்றவற்றை செய்ய தவறினால் நம்மால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியாது. பாசன வசிதிகளை பெருக்குவது மட்டுமே விவசாயிகளுக்கான பாதுகாப்பானதாக அமையும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து