முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் அப்கானை வென்றது

புதன்கிழமை, 4 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

பெர்த் - பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் 418 ரன்கள் குவித்து சாதனை. ஆப்கானிஸ்தான் 142 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது.

உலகக்கோப்பை வரலாற்றில் 275 ரன்கள் வித்தியாச வெற்றி மிகப்பெரிய வெற்றியாகும். இதே உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய சாதனையை அன்று சமன் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா நேற்று பெற்ற வெற்றி உலகக்கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி. அதோடு, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் 2-வது மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா நிகழ்த்தியது.
முதலில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவுக்கு 417 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 37.3 ஓவர்கள் அதாவது 225 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் 142 ரன்களுக்கு இழந்து தோல்வி தழுவியது. ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் ஜான்சன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆப்கன் அணியின் நவ்ரோஸ் மங்கல் மட்டுமே 35 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 33 ரன்களை அதிகபட்சமாக எடுத்துள்ளார்.

இந்திய சாதனை முறியடிப்பு:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக 413 ரன்கள் எடுத்து இந்திய அணி வைத்திருந்த சாதனையை ஆஸ்திரேலியா இன்று முறியடித்து ஆப்கன் அணிக்கு எதிராக 417 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தது. பெர்த்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கன் பந்துவீச்சை புரட்டி எடுத்து 417 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியது.

2007-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்களை இந்தியா குவித்தது இதுவரை உலகக்கோப்பை சாதனையாக இருந்தது. நேற்று ஆஸ்திரேலியா, ஆப்கன் அணிக்கு எதிராக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்து புதிய உலகக்கோப்பை சாதனையை படைத்தது. ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 133 பந்துகளில் 19 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 178 ரன்களை எடுத்தார். அவர் அவுட் ஆகும் போது 38-வது ஓவர் நடந்து கொண்டிருந்தது.

ஸ்டீவ் ஸ்மித் 98 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் அதிவேக உலகக்கோப்பை சதத்தை அச்சுறுத்தினார், ஆனால் அவர் 39 பந்துகளில் 6 பவுண்டரி 7 சிக்சர் சகிதம் 88 ரன்களில் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டுக்காக வார்னர், ஸ்மித் சேர்த்த 260 ரன்கள் ஆஸ்திரேலிய அணி சாதனையாகும். எந்த ஒரு விக்கெட்டுக்கும் ஆஸ்திரேலிய அணியின் அதிக பட்ச ஜோடி ரன்களாகும் இது.

ஆப்கன் அணியில் தவ்லத் சத்ரான் 10 ஓவர்களில் 101 ரன்களை விட்டுக் கொடுத்தார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் சத்ரான் 10 ஓவர்களில் 89 ரன்களையும், ஹமித் ஹசன் 70 ரன்களையும், மொகமது நபி 84 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இதையடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 38-வது ஓவரிலேயே 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக மங்கல் 33 ரன்கள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 275 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து