முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ மாணவி பற்றிய ஆவணப்படம்: இயக்குனர் தப்பியோட்டம்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

புது டெல்லி - மருத்துவ மாணவி பலாத்கார சம்பவம் குறித்த ஆவணப்படம் எடுத்த பெண் இயக்குனர், வெளிநாடு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. எதிர்ப்பையும் மீறி படம் ஒளிபரப்பப்பட்டதால், தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், வெளிநாடு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதியன்று, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டன. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த லெஸ்வி என்பவர், இந்தியாவின் மகள் என்ற பெயரில், பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த மாணவி குறித்த ஆவணப்படம் எடுப்பதற்காக இந்தியா வந்தார். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முகேஷ் சிங்கை சந்தித்து பேட்டி எடுத்தார். பாலியல் பலாத்காரத்தை நியாயப்படுத்தியும், பெண்களுக்கு எதிராகவும் அவர் பேட்டியளித்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றவாளியை சந்தித்து பேட்டி எடுக்க எவ்வாறு அனுமதி அளிக்கலாம் என எதிர்க்கட்சியினர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினர். இது பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

குற்றவாளியை சந்திக்க அனுமதி வழங்கியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆவணபடத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அலித்தார். ஆவணப்படத்தை வெளியிடக் கூடாது என டெல்லி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆவணப்படம் பிபிசியில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியது.

மகளிர் தினமான வருகிற 8ம் தேதியன்று ஆவணப்படத்தை வெளியிட பிபிசி திட்டமிட்டிருந்த நிலையில், இந்தியாவின் வேண்டுகோளை ஏற்காமல் முன்கூட்டியே வெளியிட்டு விட்டது.
ஆவணப்பட வெளியானதால் தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அப்படத்தின் இயக்குனர் லெஸ்லி தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து