முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையகப்படுத்தும் மசோதா: மக்களவையில் 9ம் தேதி விவாதம்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் வரும் 9ம் தேதி விவாதத்துக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இது குறித்து அவர் பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 
காப்பீட்டு சட்ட திருத்தம் குறித்த அவசர சட்டத்தை சட்டமாக்கும் மசோதா மக்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இதே போல மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் வரும் 9ம் தேதி விவாதத்துக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முக்கிய அமைச்சகங்களும் அது குறித்து விவாதித்து வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள், விவசாயிகளின் கருத்துக்கள் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சட்ட திருத்தத்துக்கான முக்கிய அம்சம் கைவிடப்படாது என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகள்  கொண்டு வந்த திருத்தமானது, பொதுமக்களின் நலன் சார்ந்து கொண்டு வரப்பட்டதல்ல என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து