முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: இன்று இந்தியா மே.இ.தீவுகளுடன் பலப்பரீட்சை

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

பெர்த் - உலகக்கோப்பை போட்டியில் அடுத்ததாக இன்று மேற்கு இந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது இந்திய அணி.
உலகக் கோப்பை கிரிக்கேட் கடந்த மாதம் 13 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணி மோதுகின்றன.

இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் பி பிரிவு அணி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது இந்திய அணி. மேற்கு இந்திய தீவுகள் அணி இந்த உலக கோப்பை தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வென்றது. இரண்டாவது போட்டியில் மற்றொரு பலம் வாய்ந்த அணியான தென் ஆப்பிரி்ககாவை அபாரமாக வென்று தென் ஆப்பிரிக்காவின் உலக கோப்பை சாதனையை முறியடித்தது. 3-வது போட்டியில் யுஏஇ அணியை எளிதாக வென்று பலமான நிலையில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறிவிடும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புள்ளது.

மேற்கு இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட ரன்னை எளிதாக விரட்டி பிடித்து அதிர்ச்சி அளித்தது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை அபாரமாக வென்று நடப்பு உலக கோப்பையில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 3-வது போட்டியில் ஜிம்பாப்வே அணியை போராடி வென்று 2 வெற்றி பெற்றது. இதையடுத்து 4-வது போட்டியில் பலமான அணி என்று கருதப்படும் தென் ஆப்பிரிக்காவிடம் பரிதாபமாக தோற்றது.

இதனால் இந்த உலகக் கோப்பையில் மேற்கு இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்வி என்று உள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வென்றால் தான் எளிதாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் முழுமுச்சாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் இவ்விறு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இந்தியா 4 போட்டிகளிலும், மேற்கு இந்திய தீவுகள் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், மெக்கல்லம் போன்ற அதிரடி வீரர்கள் அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டால் கேப்டனோ, பவுலரோ ஒன்றும் செய்வதற்கில்லை, என்கிறார் தோனி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டிவில்லியர்சை நெருக்கி 2-வது ரன் ஓட வைத்து ரன் அவுட் செய்தது இந்தியா, ஆனால் இன்று மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு இன்னொரு பெரிய தலைவலி காத்திருக்கிறது அவர்தான் கிறிஸ் கெய்ல்.

கெய்லுக்கு எதிராக எதுவும் முன் திட்டம் உள்ளதா என்று டோணியிடம் கேட்ட போது, சிறந்த திட்டம் என்னவெனில் எதுவும் திட்டமிடாமல் இருப்பதே என்று கூறியுள்ளார்.இவர்கள் ஆடத் தொடங்கி சிக்சர்கள் அடிக்கத் தொடங்கினால் ஒன்றும் செய்ய முடியாது என்பதே. சிக்சருக்கு வியூகம் அமைக்க இயலாது. ஏதாவது முன் திட்டமிட்டால் அதில் நாம் தோற்றுத்தான் போவோம். உதாரணமாக ஷார்ட் பிட்ச் வீசலாம் என்று தீர்மானித்தால் அத்தனை ஷார்ட் பிட்சும் பவுண்டரி போக ஆரம்பித்தால் அவ்வளவுதான்.

இப்படிப்பட்ட பேட்ஸ்மென்களை ஏமாற்றிப் பார்க்கலாம். இதன் மூலம் பவுலர்கள் வித்தியாசமாக ஏதாவது முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதைத் தவிர இதைச் செய்தால் இது நடக்கும் என்றவாறான நிலையான திட்டம் அவர்களுக்கு எதிராக செய்ய முடியாது.

இங்குதான் பந்துவீச்சாளர்கள் ஒரு கூடுதல் முயற்சி மேற்கொள்வது அவசியம். பீல்டர்களும் அவருக்கு உதவி புரியவேண்டும். ஒரு அரை வாய்ப்பு கிடைத்தால் கூட அவர்களை வீழ்த்த முனைப்பு காட்ட வேண்டும். அதாவது ஒரு வேட்டைக்குழு போல ஒன்றாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்." என்று கூறியுள்ளார் டோணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து