முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதியை நீக்க கண்டன தீர்மானம்: 58 எம்.பி.க்கள் கோரிக்கை மனு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - பாலியல் தொந்தரவு புகாரில் சிக்கிய ஐகோர்ட் நீதிபதி கங்குலியை நீக்கக்கூடிய கண்டன தீர்மானத்தில் 58 எம்பிக்கள் கோரிக்கை மனு. மத்திய பிரதேச ஐகோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் எஸ.கே.கங்குலி. இவர் தற்போது ஜபல்பூர் பெஞ்சில் பணி செய்து வருகிறார். இதற்கு முன்பு குவாலியர் பெஞ்சில் பணி செய்து வந்தார். அப்போது குவாலியர் மாவட்ட கோர்ட்டில் பணியாற்றி வந்த பெண் நீதிபதி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

நியாயம் கிடைக்காது என்ற அச்சத்தில் சம்பந்தப்பட்ட பெண் நீதிபதி தனது வேலையை ராஜினாமா செய்தார்.
முன்னதாக ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் கடிதம் எழுதினார். இது தொடர்பாக விசாரணை நடத்த போபால் ஐகோர்ட் ஒரு குழு அமைத்தது. இதனை நம்பாத அந்த பெண் நீதிபதி சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். இதை தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் ஒரு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி, பெண் நீதிபதியின் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தது.

பொதுவாக ஐகோர்ட் நீதிபதிகளை பாராளுமன்ற கண்டன தீர்மானத்தின் மூலம் தான் பதவி நீக்கம் செய்ய முடியும். பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் சிக்கிய கங்குலி மீது கண்டன தீர்மானம் கொண்டு வர குறைந்தது 50 எம்பிக்களாவது மது கொடுக்க வேண்டும். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் முயற்சியில் 58 எம்பிக்கள் கங்குலிக்கு எதிரான கண்டன தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த டெரக் ஒ பிரைன், சமாஜ்வாடியை சேர்ந்த ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜின் சதீஷ் மிஸ்ரா உள்பட பலர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த மனுக்கள் மாநிலங்களவை தலைவர் அன்சாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எம்பிக்களின் கையெழுத்து உறுதி செய்யப்பட்ட பின்னர் நீதிபதி மீதான கண்டன தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து