முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானிகளை அவமானப்படுத்திய அமெரிக்க அதிகாரிகள்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

நியூயார்க் - நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானிகள் உள்ளிட்ட 15 பணியாளர்களை 2 மணி நேரம் காத்திருக்க வைத்து அமெரிக்க அதிகாரிகள் அவமானப்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2ம் தேதி டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கின் ஜான் எப் கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்த விமானத்தில் ஏர்-இந்தியா விமானிகள் உட்பட 15 பேர் கொண்ட பணியாளர் குழுவினர் இருந்தனர். விமான நிலையத்தில் இந்த குழுவினரை சோதனையிட்ட அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் அவர்களை காத்திருக்க வைத்திருந்ததாக தெரிகிறது. விமான பணியாளர்களுக்கான சீருடைகளை அவர்கள் அணிந்திருந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் காத்திருக்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

நியூயார்க் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா நிறுவன மேலாளரும், இந்த விவகாரத்தில் விமான பணியாளர்கள் குழுவினருக்கு உதவி செய்ய முன்வரவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க சுங்கம் எல்லை பாதுகாப்பு துறை அதிகாரி அந்தோணி புக்கி கூறுகையில்,

ஏர் இந்தியா விமான பணியாளர்களின் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் முரண்பாடாக இருந்ததால் அவர்களை காத்திருக்க வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மற்றபடி வேறு எந்தவிதமான பாகுபாடு காரணமாகவும் அவர்களை அவ்வாறு நடத்தவில்லை. அனைவரையும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து