முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு: அசோக் சவாண் மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

மும்பை - ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் இருந்து தனது பெயரை நீக்க கோரி மகராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
 
இந்த வழக்கில் இருந்து எனது பெயரை நீக்குவதற்கு சிபிஐ ஏற்கனவே அனுமதி கோரியிருந்தது. ஆனால் சிபிஐயின் கோரிக்கையை மும்பை ஐகோர்ட் ஏற்க மறுத்து விட்டது. அந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று சவாண் கோரியிருந்தார். அவரது மனு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தியதாக அசோக் சவாணுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் இது தொடர்பாக நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை திரும்ப பெற முடியாது என்று அறிவித்தார். மேலும் அசோக் சவாணின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சவாணிடம் விசாரணை நடத்துவதற்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை என்று கூறி அவரது பெயரை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. ஆனால் சிபிஐயின் கோரிக்கையை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் சிபிஐ முறையிட்டது. ஆனால் மும்பை ஐகோர்ட்டும் சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து