முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலைக்கற்றை முதல் நாள் ஏலம் ரூ. 60 ஆயிரம் கோடி

வியாழக்கிழமை, 5 மார்ச் 2015      வர்த்தகம்
Image Unavailable

புது டெல்லி - 2 ஜி மற்றும் 3 ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியதில் முதல் நாளிலேயே அனைத்து அலைவரிசைகளிலும் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ் ஆகிய மூன்று அலைவரிசைகளில் ஒட்டுமொத்தமாக 380.75 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான ஏலத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.

இது தவிர 2,100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாட்டில் உள்ள 22 தொலை தொடர்பு மண்டலங்களில் 17 தொலை தொடர்பு மண்டலங்களுக்கானவை. மொத்தம் 6 சுற்றுகளாக ஏலம் நடைபெற்றதாகவும், அதில் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலைக்கற்றை ஏலத்துக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை விலையை வைத்து பார்க்கையில் ஒட்டுமொத்தமாக ரூ. 82 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் திரட்ட முடியும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஏலம் விடப்படும் அலைக்கற்றைகளில் பெரும்பாலானவற்றை தற்போது ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்களே வைத்துள்ளன.

இந்த நிறுவனங்கள் தங்களின் செல்லிடப்பேசி உள்ளிட்ட சேவைகளை தொடர வேண்டுமானால் அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்று அதை விலைக்கு வாங்குவது கட்டாயமாகும். அதன்படி தற்போதைய ஏலத்தில் 8 தொலை தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து