முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மத்திய அரசின் சார்பில் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ராமசாமி ஐயர் அறக்கட்டளையின் இயக்குநர் நந்திதா கிருஷ்ணா, சமூக சேவகர் டாக்டர். சாய்லக்ஷ்மி பலிஜெபள்ளி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவளிக்கும் பாசிட்டிவ் நெட்வொர்க் அமைப்பைச் சேர்ந்த கௌசல்யா உள்பட நாடு முழுவதும் எட்டு பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் மத்திய அரசு தேசிய விருதான ஸ்ரீ ரக்தி புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆறு பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொருளாதார மேம்பாடு, சமூக அதிகாரமளித்தல், பெண்களுக்கான சட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவரஹ்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தத் துறைகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாகச் சேவை செய்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். இந்த ஆண்டு சிறப்பாகப் பணியாற்றிய தனிப்பட்ட பெண்களுக்கு விருதுகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி எட்டு பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து