முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடையில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்கும்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மதுரை, பாளையங்கோட்டை, கோவில்பட்டியில் அதிக அளவு வெயில் அடிக்கிறது.

காற்றின் ஈரப்பதம் குறைவதால் வெப்பம் அதிகரிப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது பரவலாக 95 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதாகவும் கோடை காலத்தில் சென்னையில் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

வேலூர், திருச்சி, சேலம், பாளையங்கோட்டையில் இதை விட வெயில் அதிகம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோடை மழை பெய்யவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினர். நேற்று அதிக பட்சமாக மதுரையில் 98 டிகிரி பதிவாகியது. திருச்சியில் 97, பாளையங்கோட்டையில் 96, சேலம், வேலூரில் 95, கோவை, கரூர், பரமத்தியில் 94 சென்னையில் 92 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து