முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்சேய் நலன் காப்பதில் முன்னோடி தமிழகம்தான்: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தாய் சேய் நலன் காப்பதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகதமிழ்நாடு விளங்குகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி சென்னைஎழும்பூர் அரசு தாய் சேய் மருத்துவமனையில் நாடுமுழுவதிலும் இருந்து வந்திருந்த குழந்தைகள் நல முதுகலை பட்டமேற்படிப்புமருத்துவர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சி கத்தரங்கம் நேற்று முதல் தொடங்கியது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரம், தெருங்கானா, டில்லி, மும்பைமற்றும் வடமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் நல மருத்துவர்கள்கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கினை தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் துவக்கிவைத்துசிறப்புரையாற்றினார். அப்பொழுது அவர் குறிப்பிட்டதாவது,மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும்தமிழக அரசின் சுகாதாரத் துறைய தாய் சேய் நலன் காப்பதில் இந்தியாவிற்கேமுன்னோடியாகத் திகழ்கிறது. தமிழகத்தில் அனைத்து மருத்துவ கட்டமைப்பு வசதிகளும்செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 125 இரவு நேர பிரசவ அறுவை சிகிச்சை மையங்கள்(சீமாங் சென்டர்)114 பச்சிளம் குழந்தைகள் மையம் மற்றும் 64 தீவிர சிகிச்சை பிரிவுகள்(நிக்கு சென்டர்) மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனங்கள்,கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார நிலைகளை மேம்படுத்தும்பொருட்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது இதன் மூலம் ஆண்டிற்கு 6.5 லட்சம் தாய்மார்கள் பயனடைகிறார்கள்.

இதைப் போன்றபல்வேறு திட்டங்களின் விளைவாக பிரசவத்தின் பொழுது தாய் இறப்பு விகிதம் 1இலட்சத்திற்கு 68 ஆகவும், சிசு மரண விகிதம் 1000க்கு 21 ஆகவும் குறைந்துள்ளது.அம்மாவின் தொலைநோக்கு திட்டம்2023ன்படி தமிழ்நாட்டினை சுகாதாரமான மாநிலமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் அதிகமாக பரவிவரும் டெங்கு மற்றும்பன்றிக்காய்ச்சல் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக 4 இலட்சம்"டாமின்புளு"" மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுமருத்துவமனைகள் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகவழங்கப்படுகிறது. 50 ஆயிரம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. மற்ற மாநிலங்களில்தொற்று நோய்கள் பரவி வரும் நேரத்தில் தமிழகத்தில் அவ்வாறு பரவாமல்தடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத் துறைக்கு இந்த ஆண்டு 7005 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எழும்பூர் மகப்பேறுமற்றும் குழந்தைகள் நலப் பிரிவிற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடம் ரூ.100கோடியில் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலிருந்து பட்ட மேற்படிப்பு மாணவர்கள்200 பேர் இப்பயிற்சிக்கு வருகை தந்துள்ளீர்கள். இப்பயிற்சியானது உங்களுக்குபயனுள்ளதாக அமையும். சமுதாயத்தில் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புமருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது என பேசினார். நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவர்கள் பயன பெறும் வகையில் விழா மலரும் மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுத்தல் குறித்த புத்தகத்தையும்அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து