முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடெங்கும் பாரம்பரியத்தை பரப்புவோம்: ஜனாதிபதி

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஹோலி பண்டிகையில் வண்ணங்களை மட்டும் பரப்பாமல், நாடெங்கும் பாரம்பரியத்தை பரப்புவோம்.

நமது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டுமே ஏற்படுத்திக் கொள்வோம். இந்த வசந்த விழாவில் நமது பரந்த விரிந்த பன்முகக் கலாச்சாரத்தை புகழடைய செய்வோம். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து