முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கற்பழிப்பு குற்றவாளி பேட்டி: இணையதளங்களில் பரவியது

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - கற்பழிப்பு குற்றவாளி முகேஷ்சிங்கின் பேட்டி அடங்கிய இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விட்டது. உடனே இணையதளங்களும் போட்டி போட்டிக் கொண்டு அந்த ஆவணப்படத்தை தங்களது இணையதளங்களிலும் பரவி விட்டுள்ளன.

மேலும் யூ டியூப் வலைதளமும் இந்த ஆவணப்படத்தை பதிவேற்றம் செய்தது. ஒரு மணி நேரம் ஓடக் கூடிய அதை செல்போனில் பிராட்பேண்ட் பயன்படுத்துவோரும் பதவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் 3 லட்சம் மக்கள் இந்த ஆவணப்படத்தை பார்த்ததாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே யூடியூப்பில் இருந்து ஆவணப்பட காட்சிகளை நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து யூடியூப்பில் இருந்து ஆவணப்படம் நீக்கப்பட்டது. மெயின் சர்வரில் இருந்து ஆவணப்படம் நீக்கப்பட்டாலும் ஏராளமானோர் அதை டவுன்லோடு செய்து விட்டதால் இனி எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யூடியூப் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், தகவல் பெறுவது என்பது சுதந்திரமான சமூகத்தின் அஸ்திவாரம் ஆகும். அதில் ஒன்றை சட்ட விரோதம் என்றோ சமூக நெறிமுறைகளை மீறியது என்றோ அறிவித்தால் நீக்கி விடுவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து