முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா: 24ல் கொடியேற்றம்

திங்கட்கிழமை, 9 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை - மதுரை மாவட்ட திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது பங்குனித் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா, நடப்பு ஆண்டு மார்ச் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவினையொட்டி சுவாமி தினமும் காலை மற்றும் மலையில் தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 3ம் தேதி பங்குனி உத்திரமும், 4 ம் தேதி சூரசம்ஹார லீலையும், 5ம் தேதி பட்டா பிஷேகமும் நடைபெறுகின்றன. ஏப்ரல் 6ம் தேதி சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெறும். திருமணத்திற்கு மதுரையிலிருந்து பிரியாவிடையுடன் அருள்மிகு சொக்கநாதரும், அருள்மிகு மீனாட்சி அம்மனும் திருப்பரங்குன்றம் கோயிலில் எழுந்தருள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

விழாவின் முத்தாய்ப்பாக ஏப்ரல் 7ம் தேதி காலையில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பெரிய தேரில் எளுந்தருளி கிரிவலப்பாதையில் பக்தர்கள் வடம் பிடிக்க திருத்தேரோட்டம் நடைபெறும். விழா ஏர்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து