முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோட்சே படத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 9 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

புனே - கோட்சேயைப் பற்றிய  திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
தேஷ் பக்த் நாதுராம் கோட்சே என்ற பெயரில் கோட்சே பற்றி ஒரு படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்துக்கு தடை விதிக்க கோரி புனே சிவில் கோர்ட்டில் சமூக ஆர்வலர் ஹேமந்த் பாட்டீல் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், விரைவில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் நாதுராம் கோட்சேவை தேச பக்தராகவும், காந்தியை இந்துக்களுக்கு எதிரானவராகவும் சித்தரித்து இருப்பதாக அகில பாரதீய இந்து மகாசபை பொதுச்செயலாளர் முன்னா குமார் கூறி இருக்கிறார். இந்த திரைப்படம் வெளியானால் மத நல்லிணக்கத்துக்கு தீங்கு ஏற்படும். எனவே, இந்த திரைப்படத்தால் மதவாத பிரச்சினைகள் ஏற்படாது என்பதை பட தயாரிப்பாளர் கோர்ட்டில் உறுதி அளிக்கும் வரை, அந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம். பிங்கிள், இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டவர் இன்னும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கோட்சே திரைப்படமும் இன்னும் வெளியாகவும் இல்லை. எனவே, பிரதிவாதியின் வாக்குமூலத்தைக் கேட்டு அறியாமல் இதுபோன்ற மனுக்களை விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து