முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டண சேவை ஆன்லைனில் செலுத்துவதை எதிர்த்து வழக்கு

புதன்கிழமை, 11 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம். அபிஷேகம் ஆகிய கட்டண சேவைகள் நடைபெறுகின்றன. இந்த கட்டண சேவைகள் அனைத்துக்கும் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை கடந்த டிசம்பர் 1ம் தேதி முதல் அமுல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கட்டண சேவைகளுக்கு ஆன்லைனில், கட்டணம் செலுத்துவதை எதிர்த்து ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த எம்.வி.சங்கர் ராவ் என்பவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது முவில், திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட அனைத்து கட்டண சேவைகளுக்கும் உரிய கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற நடைமுரை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிரிடிட்கார்டு, டெபிட் கார்டு, இண்டர்நெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே கட்டண சேவையில் பங்கேற்று தரிசனம் செய்ய முடியும். நிறைய கிராமங்களில் இண்டர் நெட் வசதி இல்லை. ஏழைகள் பலர் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு வைத்திருப்பதில்லை.

எனவே, கட்டண சேவையில் பங்கேற்று தரிசனம் செய்வது என்பது அவர்களால் முடியாத காரியம். எனவே கட்டண சேவைகளுக்கான கட்டணத்தை நேரடி பணமாகவோ, டிமாண்ட் டிராப்ட், மூலமாகவோ, போஸ்டல் ஆர்டராகவோ, வங்கி காசோலை யாகவே செலுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.ராஜசேகர் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பான முவுவிவரங்களையும் தாக்கல் செய்யுமாறு தேவஸ்தான வக்கீலுக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து