முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காளஹஸ்தியை அழகுபடுத்த ரூ.200 கோடியில் திட்டம்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

காளஹஸ்தி - ஸ்ரீகாளஹஸ்தி பகுதியை அழகுபடுத்த ரூ. 200 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இத்தாலி நாட்டை சேர்ந்த சிற்பவியல் நிபுணர் மான்சினோ, ஐதராபாத்தை சேர்ந்த சிற்பவியல் நிபுணர்கள் காளஹஸ்திக்கு வந்தனர். அவர்கள் காளஹஸ்தி சிவன் கோயில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

அந்த குழுவினர் காளஹஸ்தியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் முதலில் சொர்ணமுகி ஆற்றில் நீராடி விட்டு சாமி தரிசனம் செய்ய போதிய வசதிகள் இல்லாததால் சொர்ணமுகி ஆற்றில் குளியல் அறைகளை கட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராமசேதுபாலம், சிவாசேதுபாலம் ஆகியவற்றில் நடைபயிற்சி செய்ய தனிப்பாதை அமைப்பது பற்றி ஆய்வு செய்தனர். ஏ.எம். புத்தூர் ஏரியில் நடை பயிற்சி செய்யவும், அங்கு பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தவும், படகு சவாரி விடவும் ஆலோசனை நடத்தினர். அதே போல் அயல்நாட்டு ஏரியில் இருந்து அரசு பஸ் நிலையம் வழியாக அரசு ஆஸ்பத்திரி வரையிலும் சாலையில் இருபுறமும் அழகு செடிகளை நடவு செய்வது பற்ரி பார்வையிட்டனர். பங்காரம்மன் ஏரியிலும் அழகுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்த பார்வையிட்டனர்.

சொர்ணமுகி ஆற்றின் நடுவே பெரிய சிவலிங்கம் ஒன்றை நிறுவுவது பற்றி ஆலோசனை நடத்தினர். கோவிலுக்கு சொந்தமான என்ஜீனியரிங் கல்லூரியில் பூங்கா அமைப்பது, அங்கு திறந்தவெளி கலையரங்கம் அமைப்பது, கூடுதல் வகுப்பறைகள் கட்டுவது, பெண்களுக்கென தனி விடுதி கட்டுவது, கல்லூரி வளாகத்தில் சிறப்பு கேண்டீன் தொடங்க ஆய்வு செய்தனர். காளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் அழகு செடிகளை வைக்க முடிவெடுக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக காளஹஸ்தி நகரையே அழகுபடுத்த ரூ. 200 கோடியில் திட்டத்தை வகுத்தனர். அது தொடர்பான ஆலோசனை நடத்தி விவர அறிக்கையை தயாரித்து மாநில அரசுக்கு விரைவில் அனுப்பி வைக்கவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து