முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர சட்டசபையில் இருந்து நடிகை ரோஜா வெளிநடப்பு

சனிக்கிழமை, 14 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

நகரி - ஆந்திராவில் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் தங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் 13 மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று சட்டசபையில் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏவான நடிகை ரோஜா ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் அதற்கு சபாநாயகர் சிவபிரசாத் அனுமதி வழங்காததால் சபாநாயகரை கண்டித்து ரோஜா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
 
முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது சரமாரியாக புகார் கூறினார். அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெலுங்கானா அரசு சம்பளத்தை உயர்த்தி உள்ளது. அதே போல ஆந்திராவிலும் சம்பளத்தை உயர்த்த வேண்டும். பெண்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது என்று கூறி சந்திரபாபு நாயுடு கபட நாடகமாடுகிறார். எதிலுமே வாய்ஜாலம் தான் காட்டுகிறார். தேர்தலின் போது கூறிய பல வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து