முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் நாவிதர்களுக்கு தட்டுப்பாடு: பக்தர்கள் காத்திருப்பு.

ஞாயிற்றுக்கிழமை, 15 மார்ச் 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி - திருப்பதியில் நாவிதர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் நாவிதர்களை தேவஸ்தானம் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏழுமலையானுக்கு ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனாக தினமும் ஏராளமான பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதில் தேவஸ்தானம் சார்பில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நாவிதர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர ஸ்ரீவாரி சேவகர்கள் இலவசமாக பக்தர்களுக்கு இந்த சேவையை செய்து வருகின்றனர். இதில் ஆண்கள் 671 பேரும், பெண்கள் 207 பேரும் ஈடுபட்டுள்ளனர். சாதாரண நாட்களில் நாவிதர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் விடுமுறையின்றி நாவிதர்கள் பணிக்கு வரவேண்டுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இருப்பினும் சில நேரங்களில் சுவாமியை தரிசனம் செய்யும் நேரத்தைவிட முடி காணிக்கை செலுத்த அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருமலையில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் இடமான கல்யாண கட்டா பகுதியில் முடி காணிக்கை செலுத்துவதற்காக சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 5 மணி நேரம் வரை காத்திருந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து