முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்தில் கட்சி தலைவர் உட்பட 14 பேருக்கு தூக்கு

செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

கெய்ரோ - எகிப்து அதிபராக இருந்த முகமது முர்சி கடந்த 2013ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் ஏராளமானவர்கள் பலியாகினர். அதை தொடர்ந்து சகோதரத்துவ கட்சியை தீவிரவாத இயக்கம் என அறிவித்து எகிப்து அரசு தடை செய்தது.

கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த நிலையில் சகோதரத்துவ கட்சி தலைவர் முகமது பாடி மற்றும் 13 மூத்த உறுப்பினர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் கட்சி தலைவர் முகமது பாடி உட்பட 14 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தண்டனையை குறைக்க தீர்ப்பு குறித்த மனு விசாரணையை எகிப்தின் இஸ்லாமிய சட்ட நிபுணருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மீதான இறுதி தீர்ப்பு ஏப்ரல் 11ம் தேதி வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து