முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலுவலக கம்ப்யூட்டரில் நிர்வாண படம் பார்த்த நீதிபதிகள் நீக்கம்

புதன்கிழமை, 18 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

லண்டன் - அலுவலக கம்ப்யூட்டரில் நிர்வாணப் படம் பார்த்த 3 நீதிபதிகளை இங்கிலாந்து அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. இங்கிலாந்தில் நீதிபதிகள் சிலர் அலுவலக கம்ப்யூட்டர்களில் நிர்வாண படம் பார்த்ததாக புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து நீதித்துறை நன்னடத்தை அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது 4 நீதிபதிகள் நிர்வாண படம் பார்த்தது தெரியவந்தது. அது குறித்த அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கோர்ட் உபகரணத்தை இது போன்று தவறாக பயன்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். இது கண்டிக்கத்தக்கது. மேலும் இதை ஒருபோதும் ஏற்க முடியாது என கூறப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து 3 நீதிபதிகளை அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே மேலும் ஒரு நீதிபதி தானாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து