முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலில் தேர்தல்: பிரதமர் நேதன்யாகு கட்சி வெற்றி

புதன்கிழமை, 18 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

ஜெருசலம் - 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று முன்தினம் ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 92.5 சதவீதம் ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளதில் நேதன்யாகுவின் லிருட் கட்சி முன்னணியில் இருந்தது. இக்கட்சி 30 இடங்களை கைப்பற்றியிருந்தது.

மேலும்  பல தொகுதிகளில் முன்னணி வகித்தது. எனவே இக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஷியோனிஸ்ட் கட்சிக்கு 24 இடங்கள் கிடைத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் எதிர்க்கட்சியான ஷியோனிஸ்ட் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நேதன்யாகுவின் தீவிர பாலஸ்தீன எதிர்ப்பு பிரகாசம் தேர்தல் முடிவை மாற்றியமைத்துள்ளது. இஸ்ரேல் தேர்தல் விதிமுறைப்படி இதுவரை எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது இல்லை.

சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தான் ஆட்சி அமைத்துள்ளன. அதே போன்றுதான் 65 வயது நேதன்யாகு தேசியவாதி மற்றும் மதவாத கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்கிறார். ஏற்கனவே 3 முறை அதாவது 9 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். தற்போது 4வது முறையாக அவர் பொறுப்பேற்றால் இஸ்ரேலில் நீண்ட நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து