முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது காலிறுதி: ஆஸ்தி.,வை இன்று சந்திக்கிறது பாக்.,

வியாழக்கிழமை, 19 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் - விறுவிறுப்பாக நடந்து வரும் உலக கோப்பை தொடரில், இன்று நடக்கும் மூன்றாவது காலிறுதியில்  ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அடிலெய்டில் நடக்கும் போட்டி, இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.  ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை லீக் சுற்றில் நியூசிலாந்துடன் மட்டும் தோல்வியடைந்தது.

அதன் பின் சுதாரித்து விளையாடி, அட்டகாசமாக காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங்,  பவுலிங்கில் சூப்பர் பார்மில் உள்ளது. கேப்டன் கிளார்க், வார்னர், சுமித், ஹேடின் என ஆஸ்திரேலியாவின்  பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. தனி வியூகம் அமைத்தால் மட்டுமே மேக்ஸ்வெல்லின்  அதிரடியை கட்டுப்படுத்த முடியும். பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 16 விக்கெட் வீழ்த்தி,  அபார பார்மில் உள்ளார். இதனுடன் ஜான்சன், பேட் கம்மின்ஸ்ஸின் வேகப்பந்துகளும்  அச்சுறுத்தலாக அமையும். ஷேன் வாட்சன், ஜேம்ஸ் பால்க்னர் ஆல் ரவுண்டர்களாக  அசத்தலாம்.
பாகிஸ்தான்  அணி போரா டிதான் காலிறுதி வாய்ப்பை பெற்றது.

ஆனால் பாகிஸ்தானை  ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. பேட்டிங்கில் சர்ப்ராஸ் அகமது, கேப்டன் மிஸ்பா  சூப்பர் பார்மில் உள்ளனர். அகமது ஷெசாத், ஹாரீஸ் சோகைல் கணிசமாக ரன் குவிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். உமர் அக்மல், அப்ரிடி, மக்சூத்  பார்ம்க்கு திரும்புவது அவசியம்.  காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முகம்மது  இர்பான் விலகியது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
 
ஆனால் வகாப்  ரியாஸ், ரகத் அலி, சோகைல் கான் சரியான நேரத்தில் பார்முக்கு  திரும்பியுள்ளது பலம். கடைசி இரு லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து  அணிகளை வீழ்த்தியதால், பாகிஸ்தான் புது உத்வேகத்துடன் களமிறங்கும். உலக  கோப்பையில்  இதுவரை இரு அணிகளும் 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும்  தலா 4 வெற்றியை பெற்றுள்ளன. அரையிறுதிக்கு முன்னேற சம பலம் பொருந்திய இரு  அணிகள் மோதுவதால், போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து