முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குண்டுவீச்சு: மாளிகையை விட்டு ஏமன் அதிபர் தப்பியோட்டம்

வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

ஏமன் - ஏமன் நாட்டில் கடந்த 2012ம் ஆண்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து 25 ஆண்டுகளாக அதிபராக இருந்த சர்வாதிகாரி அலி அப்துல்லா சலே பதவி விலகினார். அவரை தொடர்ந்து அபேடிராப்போ மன்சூர் ஹாதி புதிய அதிபரானார். அவரை எதிர்த்து  ஹூதி தீவிரவாத இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த ஆண்டில் ஏமனின்  பெரும்பாலான பகுதிகளை தங்கள் வசப்படுத்தினர்.

சமீபத்தில் தலைநகர் சனாவையும் கைப்பற்றினர். அதை தொடர்ந்து அதிபர் ஹாதி அங்கிருந்து தப்பி ஏடன் நகருக்கு ஓடி விட்டார். இந்த நிலையில் ஏடன் விமான நிலையத்தை கைப்பற்ற ஹூதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்களை எதிர்த்து அதிபர் ஹாதி ஆதரவு ராணுவம் சண்டையிலும் ஈடுபட்டது. தீவிரவாதிகள் மீது ராணுவத்தின் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

எனவே குண்டுகள் அதிபர் தங்கியிருக்கும் மாளிகையின் மீது விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அதிபர் ஹாதி மாளிகையில் இருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வெளியேற்றப்பட்டு வேறு ஒரு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து