முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்: ஐ.நா. கவலை

சனிக்கிழமை, 21 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க் -  பாகிஸ்தானில் கைதிகள் தூக்கிலிடப்படுவது அதிகரித்து வருவது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. மரண தண்டனைகளால் குற்றங்களையோ, பயங்கரவாதத்தையோ தடுக்க முடியாது என்று கூறியுள்ளது.  இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கு பாகிஸ்தான் மீண்டும் தடை விதிக்க வேண்டும். பயங்கரவாத குற்றங்களுக்கு மட்டுமின்றி, சாதாரண குற்றங்களுக்கும் விதித்த மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான தடையை பாகிஸ்தான் விலக்கியிருப்பது கவலை அளிக்கிறது. தடை நீக்கத்துக்கு பிறகு பாகிஸ்தானில் தூக்கிலிடப்பட்டவர்களில் பலர் குற்றம் நிகழ்ந்த போது 18 வயதுக்கும் உட்பட்டவர்கள். 18 வயதுக்குள் செய்த தவறுக்காக உலகில் எங்கும் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதால் குற்றங்களையோ, பயங்கரவாதத்தையோ தடுக்க முடியும் என்பதற்கு அறிவியல் ரீதியிலான ஆதாரங்கள் இல்லை. பாகிஸ்தான் மட்டுமின்றி உலகின் எந்த நாட்டிலும் தவறான நீதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து