Idhayam Matrimony

மும்பை ஸ்டேடியத்தில் தகராறு: ஷாருக்கான் மீது வழக்கு

சனிக்கிழமை, 21 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

மும்பை - மும்பை ஸ்டேடியத்தில் நடந்த தகராறு தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மீது 3 ஆண்டுக்குப் பின் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்தது. அப்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானுக்கும், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது.

போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரையும் ஷாருக்கான் தள்ளி விட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகராறின் போது ஷாருக்கான் அவதூறான வார்த்தைகளை சிறுவர்கள் முன் பேசினார். அவரது மகளும் அவர் பேசுவதை பார்த்து கொண்டு இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே விசாரணை நடத்தி வான்கடே மைதானத்தில் நுழைய தடை விதித்தது. பின்னர் அந்த நடவடிக்கையை வாபஸ் பெற்று கொண்டது.

இதற்கிடையே ஷாருக்கான் சிறுவர்கள் முன் அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசி கொண்டது தொடர்பாக மராட்டிய மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஷாருக்கானின் பேச்சு சிறுவர்களின் மனதை பாதிக்கும் வகையில் உள்ளது. இது அவர்களின் உரிமைக்கு எதிரான தாக்குதல் ஆகும். அவர் செய்தது சிறுவர்கள் நீதி சட்டப்படி குற்றம் ஆகும் என்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து