முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநில விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - வட மாநிலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய மற்றும் அரியானா மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு நாள் சுற்றுப் பயணமாக அரியானாவுக்கு சென்ற சோனியா, பிவானி மாவட்டம் பத்ரா மற்றும் ரோட்டக் மாவட்டம் ரத்தன்தால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயி களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சோனியா கூறுகையில்,

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் விவசாயிகள். இப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு ஆகும். அதிலும் குறிப்பாக பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசின் கடமை ஆகும். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாவிட்டாலும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க போராடும் என்று தெரிவித்தார்.
சோனியாவுடன் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது, மாநில காங்கிரல் தலைவர் அசோக் தன்வார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து