முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கு: நிதின் ஆஜர்

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது தான் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி டெல்லி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஆம் ஆத்மி சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட  இந்தியாவின் ஊழல் அரசியல் வாதிகள் என்ற தலைப்பிலான பட்டியலில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கட்காரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கோமதி மனோசா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் அமைச்சர் கட்காரியிடம் சுமார் இரண்டரை மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் போது கெஜ்ரிவால் மற்றும் கட்காரி தரப்பு வழக்கறிஞர்கள் இடையே காரசார வாதம் நடைபெற்றது.
இருதரப்பு வழக்கறிஞர்கள் இடையே விவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் வழக்கறிஞர்களை மாஜிஸ்திரேட் கடுமையாகக் கடிந்து கொண்டார்.

விசாரணை முடிவில், சில ஆவணங்களை வழங்கும்படி கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் கேட்டனர். அதற்கு ஏப்ரல் 18ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி கட்காரி தரப்பு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாமல் இருக்க முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் நிரந்தர விலக்கு அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து