முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பெங்களூர் டேஸ்' ரீமேக் தொடங்குகிறது

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

ஆர்யா, சிம்ஹா, ராணா நடிக்கும் 'பெங்களூர் டேஸ்' படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது.

பஹத் பாசில், நஸ்ரியா நஸீம், துல்கர் சல்மான், நிவின் பவுலி, பார்வதி, இஷா தல்வார், நித்யா மேனன் என மலையாள திரையுலகைக் கலக்கும் இளமைப் பட்டாளம் அனைவரும் 'பெங்களூர் டேஸ்' படத்தில் நடித்தனர்.

அஞ்சலி மேனன் இயக்கிய இப்படம் தனி கவனம் பெற்றதோடு, வர்த்தகத்துடன் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. 9 கோடியில் தயாரிக்கப்பட்ட 'பெங்களூர் டேஸ்' ரூ.50 கோடி வசூலை அள்ளியது.

பெங்களூரில் செட்டில் ஆக வேண்டும் என்பது கனவு காணும் மூன்று நண்பர்கள் கதைதான் படத்தின் மையக்கரு. ஆனால், அவர்களின் கனவு வெவ்வேறு விதங்களில் நிறைவேறுகிறது. எந்த பதற்றமும் அலுப்பும் இல்லாமல் திருப்பங்களை மட்டுமே நம்பாமல் சுவாரஸ்யமாக இருப்பதுதான் இப்படத்தின் பலம்.

இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றி பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஆர்யா, சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா நடிக்கவிருக்கும் இப்படத்தை பாஸ்கர் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

குகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்க இருக்கிறார். இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்கவிருக்கும் படப்பிடிப்பு அதைத் தொடர்ந்து பெங்களூர், புனே, காசி உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து