முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த முறை உலகக் கோப்பை எங்களுக்கு தான்: டிவில்லியர்ஸ்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து - இம்முறை உலக கோப்பை எங்களுக்குதான் கிடைக்கும், அதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை அரையிறுதியில் இன்று, ஆக்லாந்தில் நடைபெற உள்ள முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்க அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் நடுவே, நிருபர்களுக்கு பேட்டியளித்தார், தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ்.

டி வில்லியர்ஸ் கூறியாதாவது:

தென் ஆப்பிரிக்க அணி தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. நாக்-அவுட் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயரை இந்த உலக கோப்பையில் நீக்கியுள்ளோம்.  தென் ஆப்பிரிக்க அணி தனது முழு பலத்தோடு விளையாடினால், அதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.

உலக கோப்பை தொடர்களில் மட்டும் தென் ஆப்பிரிக்கா சிறப்பாக ஆடுவதில்லை என்ற அவப்பெயர் இருந்தது. அத்தனை உணர்ச்சிவசங்களுக்கு நடுவேயும், அதோடு மோதி, அதை ஏர்றுக் கொண்டு, போராடி வெற்றி பெற்றுள்ளோம். பழைய கதைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ அதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கையுள்ளது.

உலக கோப்பை தொடர்களில் தென் ஆப்பிரிக்கா இதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை நாங்கள் முழுக்க ப்ரெஷ்ஷாக உள்ளோம். இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து