முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் கோஹ்லி அசத்துவார்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முக்கியமான அரையிறுதி போட்டியில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம், விராட் கோஹ்லி அசத்துவார் என்று கேப்டன் டோணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க லீக்கில் சதம் அடித்த இந்திய துணை கேப்டன் விராட் கோஹ்லி, அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. 30 அல்லது 40 ரன்களை விரைந்து எடுக்கும் கோஹ்லி, அதை பெரிய ஸ்கோராக மாற்றுவதில் தடுமாற்றம் அடைந்து வருகிறார். வங்கதேசத்துக்கு எதிராக காலிறுதி ஆட்டத்தில் மட்டுமே ஒற்றை இலக்கு ரன்னில் கோஹ்லி வெளியேறினார்.

கோஹ்லியின் தடுமாற்றம் குறித்து இந்திய அணியின் கேப்டன் டோணியிடம் நிருபர்கள் கேட்ட போது கூறியதாவது:
விராட் கோஹ்லியின் பேட்டிங் மோசமாக இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாமல் அவர் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். அதற்காக, களம் இறங்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் சதம் அடிக்க வேண்டும் என்பது முடியாத காரியம். டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை வைத்து ஒவ்வொரு இன்னிங்சிலும் அவர் சதம் விளாச வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் அவுட் ஆன ஆட்டங்களில் மோசமான ஷாட்டுகளை தேர்வு செய்ததாக கருதவில்லை. நேர்த்தியான ஷாட்டுகள் மூலம் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் கோஹ்லி. எப்போதுமே பெரிய வீரர்கள் முக்கியமான ஆட்டத்தில் அதிக ரன்கள் குவிப்பார்கள். அதே போல் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இவ்வாறு டோணி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

1 கருத்துகள்

  1. Anonymous March 25, 15:19

    கொஹ்லி கண்டிப்பாக இந்திய ஆஸ்திரேலியா இன்னிங்க்ஸ் இல் கலக்குவார். அணைத்து இந்திய வீரர்களும் புல் பார்மில் இருக்கின்றனர். இந்த முறையும் உலக கோப்பை இந்தியாவிற்கு தான். #BLEEDBLUE

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து