முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான் யெவ் மரணம்

திங்கட்கிழமை, 23 மார்ச் 2015      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர் - சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யெவ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு உலகத் தலைவர்கள் அவரகளது இரங்கலை தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யெவ். 91 வயதான அவர் கடந்த சில நாட்களாக நுரையீரல் சுழற்சி நோயால் அவதிப்பட்டு வந்தார். எனவே அவரை பிப்ரவரி 5ம் தேதி முதல் சிங்கப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. அதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3.18 மணி யளவில் அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த செய்தியில், முன்னாள் பிரதமர் லீ இன்று(நேற்று) அதிகாலை3.18 மணியளவில் சிங்கப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மரணம் அடைந்த லீ குவான் யெவ் இறுதி சடங்கு எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை. அது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணம் அடைந்த முன்னாள் பிரதமர் லீ குவான் யெவ்வுக்கு லீ சியென் லூங். லீ சியன் யவ் ஆகிய 2 மகன்களும், லீவீ லிங் என்ற மகனும் உள்ளனர். மனைவி கடந்த 2010ம் ஆண்டில் அவரது 89-வது வயதில் மரணம் அடைந்தார் மூத்த மகன் லீ சியென் லூங் தற்போது சிங்கப்பூரின் பிரதமர் ஆவார்.

மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை பெற்று புதிய நாடாக உருவாகியது. அதை உருவாக்கியவர்களில் லீ குவான் யெவ்வும் ஒருவர் எனவே இவர் தற்போதைய நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவரே சிங்கப்பூரின் முதல் பிரதமர் ஆவார். இவர் 31 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தார். கடந்த 1990ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்கா அதிபர் ஒபாமா ஐ.நா, பொதுச் செயலாளர் பான்கிமூன், சீனா வெளியுறவு மந்திரி உள்ளிட்ட உலகத் நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்:

சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்  குவான்யெவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துளஅளார். அதில் அரசியல் மேதையாகவும், சிங்கப்பூர் தலைவராகவும் திகழ்ந்த லீ குவான் யெவ் வாழ்க்கை அனைவருக்கும் விலைமதிப்புமிக்க பாடமாகும். அவரது மறைவு குறித்த செய்தி மிகவும் வருத்தத்தை  அளிக்கிறது. இந்த தருணத்தில் லீ குவான் யெவ் குடும்பத்தினருக்கும், சிங்கப்பூர் மக்களுக்கும் மனதைரியம் அளிக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். அவரது ஆன்மா அமைதி அடையட்டும் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து