முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம்: ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:– மதுரை புறநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரமசிவம் உடல் நலக்குறைவால் மரண மடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர் பரமசிவம் மாணவர் அணி அமைப்பாளர், தொகுதி அமைப்பாளர், கழகப் பொதுக்குழு உறுப்பினர், மாவட்டக் கழகச் செயலாளர் முதலான பொறுப்புகளில் கழகப் பணிகளை ஆற்றி உள்ளதோடு, சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரமசிவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

சொந்த ஊரில் உடல் தகனம்- அதிமுகவினர் அஞ்சலி

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 1991ம் ஆண்டு அதிமுக அரசு தமிழகத்தில் அமைந்த போது வேளை வாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.மா.பரமசிவன். இவர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள நெல்லியேந்தல் பட்டி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த அ.மா.பரமசிவன் சென்னை அப்பல்லோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 69. இதனை தொடர்ந்து அவரது உடல் சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று அதிகாலை மதுரை கொண்டு வரப்பட்டி அவர் குடியிருந்த வந்த அண்ணாநகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் அதிமுகவினரும், பொதுமக்களும் அவரது உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.  

அவரது உடலுக்கு  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சார்பில்  மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ம.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.,  மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்,மேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாமி, மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா , எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன்,ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அவரது குடும்பத்தாருக்கு  ஆறுதல் கூறினார்கள்.

மேலும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் பிருதிவிராஜ்,தேனி மாவட்ட கழக செயலாளர் டி.டி.சிவகுமார் முன்னாள் எம்.பி.சையதுகான், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் டி.பார்த்திபன், திண்டுக்கல் மாவட்ட அவைத்தலைவர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா.இளங்கோவன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய அம்மா பேரவை துணைத்தலைவர் நிலையூர் முருகன்,மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மராஜா,துணைத்தலைவர் ஜபார்,மேலூர் நகர்மன்ற தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, கே.முருகேசன், வக்கீல் அசோகன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் அவர்கள் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பொதுமக்கள் மற்றும் அதிமுகவினரின் அஞ்சலிக்கு பின் அ.மா.பரமசிவனின் உடல் மதுரை அண்ணாநகரிலிருந்து அவரது சொந்த ஊரான நெல்லியேந்தல்பட்டிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள சுடுகாட்டில்  தகனம் செய்யப்பட்டது. மரணமடைந்த முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவன் 1977 ம்ஆண்டு மேலூர் சட்டபேரவை உறுப்பினராகவும், 1991 ம்ஆண்டு சோழவந்தான் சட்டபேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1993ம் ஆண்டு முதல் 96 ம் ஆண்டு வரை தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றியவர்.

அதிமுக என்ற இயக்கத்தை எம்.ஜி.ஆர் முதன் முதலில் தொடங்கிய போது 1972 ம்ஆண்டில் இருந்து 1979 ம்ஆண்டு வரை மேலூர் தொகுதியின் அமைப்பாளராக அ.மா.பரமசிவன் பணியாற்றினார். 1991 ம் ஆண்டு முதல் 2001 ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்தமதுரை புறநகர் மாவட்ட  அதிமுக செயலாளராகவும் பணியாற்றியவர். அவருக்கு நல்லம்மாள் என்ற மனைவியும், செல்வகுமார்,ராஜ்குமார் என்ற மகன்களும், சூர்யா என்ற மகளும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து