முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெ.ஆப்பிரிக்க தோல்விக்கு காரணமான தெ.ஆப்பிரிக்க வீரர்

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து மைதானத்தில் நேற்று முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது இதில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதினர். இதில் நியூசிலாந்து பேட்ஸ்மேன் எல்லியட் இதுவரை நடந்த எந்த போட்டியிலும் சோபிக்க வில்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் அபாரமாக ஆடினார். 73 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடைசியாக இரண்டு பந்துகளில்  5 ரன்கள் தேவை என்ற நிலையில் அபாரமான ஒரு சிக்சரை அடித்து நியூசிலாந்தை இறுதிப் போட்டிக்குள் நுழைத்தார். இந்த எல்லியட் யார் தெரியுமா. தென் ஆப்பிரிக்க வீரர் என்பது தான் ஆச்சரியம். ஆம் தென் ஆப்பிரிக்காவில் பயிற்சி பெற்ற இவர் அங்கு வாய்ப்பு கிடைக்காததால் நியூசிலாந்து அணியில் விளையாடி வருகிறார். இவரின் அபார ஆட்டமே தென் ஆப்பிரிக்க தோல்விக்கு காரணமாக அமைந்தது.

2 கேட்ச், ரன் அவுட்டை கோட்டை விட்டதால் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா

பரப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபாரமாக பேட்டிங்க செய்து 281 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து இந்த ஸ்கோரை எட்ட சிரமப்படும் நிலையில் தான் இருந்தது கடைசி கட்டங்களில் இரண்டு ரன் அவுட், இரண்டு கேட்கலை தென் ஆப்பிரிக்க வீரர்கள் தவறவிட்டு அவர்களின் தலையில் அவர்களே மண்ணை வாரி போட்டு கொண்டனர். கடைசி நேர பதற்றம் என்ற பெயரில் கேப்டன் டிவில்லியர்சே சாதாரண ஒரு ரன் அவுட்டை தவறவிட்டு தோல்விக்கு காரணமாகவும் ஆகிவிட்டார்.

தொடரும் சோகம்

இதுவரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத தென் ஆப்பிரிக்கா. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு இதுவரை தென் ஆப்பிரிக்காவும், நியூசிலாந்தும் தகுதி பெற்றதே இல்லை. ஆனால் இந்த முறை இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா வந்து விடும் கோப்பையை வென்று விடும் என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் மிக திறமையான அணி என்று வர்ணிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா வழக்கம் போல் தோல்வியை தழுவி போட்டயில் இருந்து வெளியேறியது. எப்போதுமே தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிர்ஷடம் இல்லை என்று கூறுவது உண்டு. ஆனால் இந்த முறை அதிர்ஷ்டத்தை சொல்லி தப்பிக்க முடியாது தென் ஆப்பிரிக்க வீரர்கள். காரணம் இந்த முறை அவர்கள் செய்த தவறுகளாலேயே அவர்கள் தோற்றனர்.

மைதானத்தில் கண்ணீர் விட்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள்

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. அதிக ரன்களை குவித்த தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் நிலையிலேயே இருந்தது. ஏற்கெனவே வந்த கருத்துக் கணிப்புகளும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெரும் என்றே இருந்தது. கடைசி ஓவர் வரை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் நியூசிலாந்து எல்லியட் அடித்த அபார சிக்சர் ஆட்டத்தின் முடிவை அப்படியே மாற்றியது. இதனால் ஏமாற்றம் அடைந்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டனர். கேப்டன் டீவில்லியர்ஸ் கூட கண்ணீர் மல்க மைதானத்தை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மனதில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து