முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வில் காப்பி அடித்த முறைகேடு: லல்லு பிரசாத் யாதவ் கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

பாட்னா - பிகார் மாநில பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு பெற்றோர்களே விடை எழுதிய துண்டுச் சீட்டுகளை கொடுத்த விவகாரம் ஊடகங்க ளில் வெளியாகி பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எங்கள் ஆட்சி யில் தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க மாணவர்களிடம் புத்தகங்களைக் கொடுத்து, பார்த்து எழுதச் சொல்லி விட்டோம் என பிஹாரின் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிகார் கல்வி அமைச்சர் பி.கே. ஷாஹி, “நூற்றுக் கணக்கான பெற்றோர் கட்டிடத் தில் ஏறி விடை எழுதிய துண்டுச்சீட்டு களைக் கொடுத்துள்ளனர். அதற் காக அவர்களை துப்பாக்கியால் சுடவா முடியும். பெற்றோரின் ஒத் துழைப்பு இல்லாமல், நேர்மையான தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை” எனக் கூறியிருந்தார்.

இதனிடையே, பக்சார் மாவட்டத் தில் உள்ள கிராமம் ஒன்றில் புதிய பள்ளி ஒன்றை லாலு பிரசாத் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

பள்ளியின் சுவர்களில் பெற்றோர் பல்லி மாதிரி ஏறி, விடையெழுதிய துண்டுச் சீட்டு களைக் கொடுத்துள்ளனர். இதுபோன்ற புகைப்படம் எங்களின் ஆட்சியில் வெளியாகி யிருக்கிறதா? எங்களது ஆட்சி யில் தேர்வு எழுதுபவர்களுக்கு புத்தகங்களைக் கொடுத்து விட் டோம். புத்தகத்தை ஏற்கெனவே படித்தவர்களுக்கு மட்டும்தான் விடை எங்கிருக்கிறது என்று தெரியும். தேர்வு நேரம் 3 மணி நேரம்தான் என்பதால் மற்றவர் கள் விடையைத் தேடிக் கொண் டிருப்பதிலேயே நேரம் முடிந்து விடும். எனவே, பெரும்பாலான வர்கள் தேர்வில் தோல்வியடைந்து விடுவார்கள்.

தேர்வில் முறைகேடு என்பது புதிய விஷயம் அல்ல. ஆனால், பெற்றோர் சுவரில் பல்லி மாதிரி ஏறும் படம் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் வெளிவரவில்லை. இதுபோன்ற புகைப்படங்கள், பிஹாரின் பட்டப்படிப்பு சான்றிதழ் கள் மீது மக்களுக்கு அவநம்பிக் கையை ஏற்படுத்தி விடும். நீங்கள் (மாணவர்கள்) எங்கு சென்றாலும் உங்களின் கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். தேர்வில் வெற்றி பெற இயலாதவர்களை, தேர்ச்சி அடையும் வரையில் ஏன் தோல்வியடையச் செய்யக் கூடாது?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து