முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தள்ளி போகும் கார்த்தியின் கொம்பன்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

‘மெட்ராஸ்’ படத்திற்கு பிறகு கார்த்தி நடித்துள்ள படம் ‘கொம்பன்’. இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோவை சரளா, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இப்படம் முதலில் பொங்கலன்றே ரிலீசாகவேண்டியது. அப்போது நிறைய படங்கள் வெளியானதால் கொம்பன் தள்ளிபோனது.

பின்னர், மார்ச் மாதம் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தள்ளி போகிறது. கடைசியாக இப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் தேதி உதயநிதியின் ‘நண்பேன்டா’, சண்முகப்பாண்டியனின் ‘சகாப்தம்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து