முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி பிரான்சு உள்ளிட்ட 3 நாடுகளுக்கு பயணம்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பிரதமர் நரேந்திர மோடி பிரான்சு, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்லவிருப்பதாக வெளியுறவு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பிரதிபலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை மேற்கண்ட 3 நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். இதன் மூலம் மேற்கண்ட நாடுகளுடன் இரு தரப்பு உறவு வலுப்பெறும். தொழில்நுட்ப  உறவும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் மோடி பிரான்சு நாட்டிற்கு சென்று அந்நாட்டின் அதிபர் பிரான்கோயிஸை சந்திக்கிறார். மேலும் அந்நாட்டில் பல தரப்பட்ட சமுதாய மக்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.

அடுத்து ஏப்ரல் 12  முதல் 14ம் தேதி வரை ஜெர்மனியில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலாவை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதிப்பார்கள். தன்னுடைய சுற்றுப்பயணத்தின் கடைசி அம்சமாக அவர் கனடா நாட்டுக்கு சென்று அந்நாட்டு பிரதமர் ஸ்டீபனை சந்தித்து பேசுகிறார். 3 நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்து 16ம் தேதி அவர் திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து