முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகும் நாள் வெகு தொலைவில் இல்லை

புதன்கிழமை, 25 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - அதிமுக செயலாளரும் மக்களின் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் பதவியேற்று இந்த அரசை அற்பணிப்பு உணர்வுடன் வழிநடத்தி தமிழகத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.

.தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய  முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
மன உறுதி, கொடை, அறிவு, ஊக்கம் எனப்படும் அரசருக்கு உரிய 4 பண்புகளுக்கும் உறைவிடமாய் திகழும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன்  2015-2016 ஆம் ஆண்டிற்காண நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்கிறேன். கடந்த மூன்றரை ஆண்டுகளில் அவருடைய தலைமையின் கீழ் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பல வியத்தகு சாதனைகளை  படைத்துள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் இடம் பெற செய்தது. முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டு  வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தை ஒரு முன்னணி மாநிலமாக மாற்றிடும் உயர்ந்த நோக்கத்துடன் ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு திட்டம் 2023 ஒரு முன்னோக்கு முயற்சியாக வரலாற்றில் நிச்சயம் நிலைபெறும்.

மதிநுட்பம் வாய்ந்த  முன்னாள் முதல்வர் துரிதமாக செயல்பட்டு தன்னுடைய உறுதியான நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தார். அத்துடன் தமிழக மக்களுக்கு அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். எவ்வளவோ இக்கட்டான, கடினமான சூழ்நிலை இருந்தாலும் ஏழைஎளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் திட்டங்களை செயல்படுத்தினார்.

தமிழக மக்களுக்கு தன் வாழ்வையே அற்பணித்து தியாக வாழ்க்கை வாழ்ந்து  கொண்டிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  வழிகாட்டுதலின் பேரில் இந்த நிதிநிலை அறிக்கையின்  ஒவ்வொரு சொல்லும் அதற்கு அடிப்படையாக  ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும்  ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்று இந்த பேரவைக்கு வந்து நம்மையும், இந்த அரசையும் மிகுந்த ஆற்றலுடனும், அற்பணிப்பு உணர்வுடனும் வழிநடத்தி மாநிலத்தை புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம்  கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து