முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்ஜெட் குறித்து 31 ந்தேதி வரை விவாதம்: சபாநாயகர்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - வரும் 31 ம் தேதி வரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்று பேரவை தலைவர் தனபால் அறிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டபேரவையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து சட்டபேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஒ..பன்னீர்செல்வம்,அவை முன்னவர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மற்றும் திமுக கொறடா சக்கரபாணி, சவுந்திராஜன்( மார்ச்சிஸ்ட் கம்யூ)ஆறுமுகம் ( இந்திய கம்யூனிஸ்ட் ) கோபிநாத்( காங்கிரஸ்) ஐவாஹிருல்லா (ம.ம.க) புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் முடிவில் சட்டசபை சபாநாயகர் தனபால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது : தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை 26 ம் தேதி ( இன்று) பேரவைக்கு விடுமுறையாகும். 27-ம் தேதி நடைபெறும் சட்டபேரவை கூட்டத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். இதைத்தொடர்ந்து 2015-16 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் தொடங்கும்.

28 ம் தேதி 2015-16 ஆம் ஆண்டின் முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவைமுன் வைத்தல்,இறுதி துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல்.இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக் கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு,சட்டமுன்வடிவுகள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல்.நிதிநிலை அறிக்கை மீது பொதுவிவாதம் நடைபெறும்.

30 ம் தேதி நிதி நிலை அறிக்கை மீது பொது விவாதம்,31 ம் தேதி பொது விவாதம் மற்றும் பதிலுரை. அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு.மான்ய கோரிக்கை எத்தனை நாட்கள் நடக்கும்என்பது குறித்து அடுத்த அலுவல் ஆய்வுகுழு கூட்டம் கூடி முடிவு எடுக்கும் என்றும் தேமுதிக உறுப்பினர்கள் நிலை குறித்தும் அடுத்த அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி முடிவெடுக்கும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து