முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரிகள் இல்லாத வளர்ச்சிக்கான பட்ஜெட்: சரத்குமார்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - வரிகள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் , சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எந்தவித வரியும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு வரி சலுகைகள் அளிக்கப்பட்டு இருப்பது வரவேற்க கூடியது.மீனவர்களுக்கான மீன்பிடி பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பதும், செல்போனுக்கும் இன்னபிற பொருட்களுக்கும் மதிப்பு கூடுதல் வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கது. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு இந்த ஆண்டும் அதிக நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

மகளிர், குழந்தைகள் நலனுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை இருந்தாலும் அது சிறப்பாக சமாளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருப்பது பாராட்டத்துக்குரியது. மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதிபங்கீட்டை குறைத்து உள்ளது. வருத்தமளிக்கிறது. அதை முழுமையாக வழங்க வேண்டும். ஒட்டு மொத்தத்தில் சிறந்த பட்ஜெட்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ஆறுமுகம் கூறுகையில் பல்வேறு பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதும் வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் வாழ்த்தத்தக்கது என்று குறிப்பிட்டார். இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டன் கூறியதாவது:

தமிழக பட்ஜெட்டில் வேளாண்மைக்காக ரூ 6 ஆயிரத்து 613 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும், காவிரியில் அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. நதிநீர் இணைப்புக்கு முன்னுரிமை,கிராமப்புற விவசாயிகள் பொருளாதார நிலை உயர்ந்திடவும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலில் வழங்கப்பட்ட பட்ஜெட்டை பாராட்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து