முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடம்

புதன்கிழமை, 25 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சட்டசபையில் கூறியதாவது:-3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்உற்பத்தித் திறனை அமைப்பதற்காக புதுமையான சூரிய ஒளி மின்சாரக் கொள்கையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2012-ம் ஆண்டு வெளியிட்டார். அவர் தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு இதுவரை 115 மெகாவாட் சூரிய மின்சக்தித் திறன், கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் முன்னுரிமை மின்கட்டணமாக யூனிட்டுக்கு 7.01 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 5,366 மெகாவாட் அமைக்க மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 156 மெகாவாட் அமைக்க பதின்மூன்று நிறுவனங்களுடன் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட, இந்த அரசு தொடர்ந்து முனைப்புடன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த முன்முயற்சிகளின் பலனாக, சூரிய ஒளி சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இதன் விளைவாக, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் நம்மாநிலம் செய்துள்ள சாதனைகளை பாராட்டி பதின்மூன்றாவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, 1,015.13 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக நமது மாநிலம் பெற்றுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து