முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி கல்வி - வேளாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு கூடுதல் நிதி

புதன்கிழமை, 25 மார்ச் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பள்ளி கல்வித்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு வரும் நிதியாண்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதி ஒதுக்கீடு தொடர்பாக   வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

* பள்ளி கல்வித்துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*  வரும் நிதியாண்டில் உணவு மானியத்திற்கு 5300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
* வேளாண்மை துறைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 6613.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்திற்கு 250 கோடி ரூபாய்  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதிக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* ராமநாதபுரம் மாவட்டம் குதிரை வாய்மொழி, தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தழை ஆகிய இடங்களில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும்  திட்டங்கள் 1947 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 365.91 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தொழில் புரிவதற்கான சூழலை எளிமையாக்குவதற்காக ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.
* இந்த ஆண்டு போக்குவரத்து துறைக்கு டீசல் மானியமாக 500 கோடி ரூபாயும், மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண மானியமாக 480 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
.* நெடுஞ்சாலை துறைக்கு மொத்தமாக  இந்த பட்ஜெட்டில் 8228.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* மின்சாரத்துறைக்கென மொத்த நிதி உதவியாக 13,586 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
 * நீர்பாசனத்துறைக்கு  இந்த பட்ஜெட்டில் 3,727.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பொது விநியோக திட்டத்திற்கு  கீழ் உணவு மானியத்திற்கான 5300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.* வரும் நிதியாண்டில் சாலை பாதுகாப்பு நிதிக்காக 165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* நீதி நிர்வாக துறைக்கு 809.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
* காவல் துறைக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டும் 538.49 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
* தேசிய நகர்புற மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார திட்டங்களுக்காக 357 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
* மலைப்பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துவதற்காக 705 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் ஒன்று தொடங்கப்படும்.
* பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து தரவு ஆய்வு மையம் ஒன்றை அரசு ஏற்படுத்தும்.

இத்தகைய மையத்தை ஏற்படுத்தும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து